VIDEOS
எதிரே நடந்து வந்த தோனி… என்ன பார்த்ததும் அப்படி கேட்டாரு… மனசுல பட்டாம்பூச்சி பறந்துச்சு… ஆர்.ஜே விஜய் ஸ்பீச்…!!

இந்தியாவின் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனியும் அவரின் மனைவியும் இணைந்து தோனி என்டர்டெயின்மென்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மூலமாக தமிழில் லேட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க இவானா, நதியா, யோகி பாபு மற்றும் டிடிவி கணேசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழில் விட்னஸ், தெலுங்கில் அஹம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி என்ற திரைப்படத்தை இயக்கி இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதை அம்சம் கொண்ட நிலையில் ரமேஷ் திருமேனி இயக்கி உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர் ஜே விஜய் நடித்திருந்த நிலையில் , படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சில சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதாவது தோனியிடம் ஒரு முறையாவது பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட போது அவர் ஆடியோ வெளியீட்டு விழாவில் நேருக்கு நேர் வந்து கொண்டிருந்த சமயத்தில் தன்னை பார்த்து hi விஜய் என்று கூறியதும் என் மனதில் அவ்வளவு சந்தோசம் இருந்தது என கூறியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க