CINEMA
வீட்ல ரொம்ப கஷ்டம்…. அப்பா சொன்ன அந்த காரணத்தால் தான் சினிமாவுக்கு வந்தேன்…. சமந்தா ஓபன் டாக்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வைத்துள்ளார். இதற்கிடையில் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். திடீரென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உடல் நலம் சரியாகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் நீங்கள் சினிமாவை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சமந்தா ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்ததால் என்னுடைய தந்தை என் மேல் படிப்பிற்காக பணம் செலுத்த முடியாது என்று கூறிவிட்டார். அதனால் வேறு வழி இல்லாமல் சினிமாவில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் சினிமா என்னுடைய வாழ்க்கை முற்றிலுமாக மாற்றி அமைத்து விட்டது என்று கூறியுள்ளார்.