43 வயதில் இரண்டாம் திருமணம்… பார்த்திபன் முன்னாள் மனைவி சீதாவின் இரண்டாம் கணவரை பார்த்துள்ளீர்களா…??? – cinefeeds
Connect with us

LATEST NEWS

43 வயதில் இரண்டாம் திருமணம்… பார்த்திபன் முன்னாள் மனைவி சீதாவின் இரண்டாம் கணவரை பார்த்துள்ளீர்களா…???

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா.

முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

Advertisement

அதன் பிறகு படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் தொடர்களில் படங்கள் நடித்து வந்த சீதா கடந்த 2010 ஆம் ஆண்டு தன்னுடைய 43 வயதில் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவருடன் பிரச்சனை ஏற்பட்டதால் அவரையும் பிரிந்து விட்டார். அந்த சதீஷ் மற்றும் சீதா ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in