LATEST NEWS
EPS தலையில் இடி..! அதிமுகவில் இருந்து விரைவில் 25 எம்.எல்.ஏ.க்கள் விலகல்..? தவெக அமைச்சர் செங்கோட்டையன் கிளப்பிய புதிய அரசியல் அணுகுண்டு..!
“அதிமுகவில் இருந்து சீக்கிரம் 15 எம்.எல்.ஏ.க்கள் வெளியில் வரப் போறாங்க.. அதற்கான பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கு” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, அக்கட்சியில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவிலிருந்து அதிருப்தியில் உள்ள 15 எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் விரைவில் தவெகவில் இணையப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
முன்னதாக, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தவெகவில் இணைந்து தற்போது அக்கட்சியின் அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியை விட்டு நீக்கியதால் தான் தவெகவில் இணைந்து மக்கள் பணியாற்றும் நல்ல வாய்ப்பு கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏற்கனவே 10 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுடன் இணையத் தயாராக இருந்த நிலையில், தற்போது கூடுதலாக 15 பேர் வரத் தயாராகி, மொத்தமாக 25 பேர் வரை அதிமுகவிலிருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து தவிக்கும் அதிமுகவுக்கு, அமைச்சரின் இந்த அதிரடிப் பேச்சு மேலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
