CINEMA
BREAKING: வால்டர் ஒயிட் Jr. கதாபாத்திரத்தில் நடித்த ஆர்.ஜே.மிட்டே காலமானார்… சோகத்தில் ரசிகர்கள்..!!
உலகப் புகழ்பெற்ற ‘பிரேக்கிங் பேட்’ தொலைக்காட்சித் தொடரில் ‘வால்டர் வைட் ஜூனியர்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அமெரிக்க நடிகர் ஆர்.ஜே. மிட்டே (RJ Mitte – 34) காலமானார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில் நகரில் அமைந்திருக்கும் அவரது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மூளை முடக்குவாத பாதிப்புடன் பிறந்த ஆர்.ஜே. மிட்டே, தனது குறைபாட்டை ஒரு தடையாகக் கருதாமல் ஹாலிவுட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வையும் பிரதிநிதித்துவத்தையும் ஏற்படுத்திய ஒரு தீவிர ஆர்வலராகத் திகழ்ந்தார். இவருடைய இந்தத் திடீர் மறைவுச் செய்தி, அவருடன் இணைந்து நடித்த ‘பிரேக்கிங் பேட்’ படக்குழுவினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
