LATEST NEWS
கேலி பண்றது தான் உங்களோட வேலையா?….. எனக்கு புடிச்சத நான் செய்றேன்….. உங்களுக்கு என்ன?…. கோபத்தில் ஸ்ருதிஹாசன்….!!!!
தமிழ் சினிமாவில் உலக நாயகனின் மகளாக அறியப்பட்டவர் ஸ்ருதிஹாசன். தமிழில் அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முதன்முதலாக தனது தந்தையின் நடித்த ஹேராம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு லக் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு இவர் நடித்த ஏழாம் அறிவு திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு சில திரைப்படங்கள் சரியாக போகாத காரணத்தினால் முழுக்க முழுக்க தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ஸ்ருதிஹாசன் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளை வெளியிடுவார். அது எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். இந்நிலையில் தற்போது நடந்த ஒரு நிகழ்வினால் ஸ்ருதிஹாசன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஸ்ருதிஹாசன் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இதற்காக ஸ்ருதிஹாசனை பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இது குறித்து அவர் கூறும் போது நான் யார்கிட்டயும் என்னை பற்றி நியாயப்படுத்த விரும்பவில்லை. ஒவ்வொருவருக்கும் தனது உடலில் மாற்றம் செய்யக்கூடிய உரிமை உள்ளது. எனது மூக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. அதனால் நான் அறுவை சிகிச்சை செய்தேன். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. உங்களுக்கு எது செய்ய விருப்பமோ அதை செய்யுங்கள். மற்றவர்களின் வற்புறுத்துகளின் பெயரில் யாரும் எதையும் செய்ய வேண்டாம். நான் சினிமாவுக்கு வந்த போது நான் ஹீரோயின் போன்றே இல்லை என்றும், தமிழ்நாட்டு பெண் போல இல்லை வெளிநாட்டு பெண் போல் இருக்கிறார் என்று பலரும் கூறினார்கள்.
ஆனால் நான் பெரும்பாலும் கிராமத்து கேரக்டர்களில் நடித்தேன். கேலி செய்ய வேண்டும் என்றால் தொடர்ந்து பலரும் கேலி செய்து கொண்டு தான் இருப்பார்கள். அதையெல்லாம் நாம் கவனித்துக் கொண்டிருக்க வேண்டியது கிடையாது. நமக்கு ஒன்று தேவைப்பட்டால் அதில் செய்வதில் நம்முடைய விருப்பம் இருந்தால் மட்டும் போதுமானது என சுருதிஹாசன் பேசியுள்ளார்.
