“செம ரொமான்ஸ்”.. 2-ம் ஆண்டு திருமண நாளை கொல்லிமலையில் கொண்டாடிய சினேகன் – கன்னிகா தம்பதி.. அசர வைக்கும் வைரல் வீடியோ..!! - cinefeeds
Connect with us

VIDEOS

“செம ரொமான்ஸ்”.. 2-ம் ஆண்டு திருமண நாளை கொல்லிமலையில் கொண்டாடிய சினேகன் – கன்னிகா தம்பதி.. அசர வைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

தமிழ் திரை உலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர்கிட்டத்தட்ட 700 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அவரின் பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் பாடலாசிரியராக மட்டுமல்லாமல் மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி மாநில செயலாளர் ஆகவும் உள்ளார். இவரும் நடிகை கன்னிகா ரவியும் சில வருடங்களாக காதலித்து வந்தனர்.

பின்னர் அவர்கள் குடும்பத்தினர் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி சென்னையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. அவர்களின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி அடிக்கடி அவுட்டிங் செல்லும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

அதனைப் போலவே வீட்டில் நடக்கும் சின்ன சின்ன சந்தோசங்களையும் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் இரண்டாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்காக கொல்லி மலைக்கு சென்றுள்ளனர். அங்க எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kannika Snekan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kannikasnekan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in