LATEST NEWS
“23 விநாடிகளில் பறந்த 13 செருப்படிகள். 4 உதைகள்…” கை வச்சது தப்புனு இப்ப புரிஞ்சிருக்கும்..! நோயாளி உறவினரிடம் அத்துமீறிய ஊழியர்.. ஓட ஓட அடித்து வெளுத்த குடும்பத்தினர்..! வைரலாகும் பகீர் வீடியோ..!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி மாநில மருத்துவக் கல்லூரியில், நோயாளிகளுடன் வந்த உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினரும் பொதுமக்களும் மருத்துவமனை வளாகத்திலேயே அந்த ஊழியரைச் சரமாரியாகத் தாக்கினர்.
வெறும் 23 விநாடிகளுக்குள் அந்த ஊழியரை 13 செருப்புகளாலும், 4 உதைகளாலும் பொதுமக்கள் வெளுத்து வாங்கிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த லலித்பூர் காவல்துறையினர் மற்றும் கான்பூர் ஏ.டி.ஜி அலுவலகம், உடனடியாக இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
