LATEST NEWS
“சீரமைப்புக்கு ‘எண்ட் கார்டு… எதிர்க்கட்சி மோடுக்கு ‘ஸ்டார்ட்’..! ஸ்டாலினின் அதிரடி தந்திரம்..!!”
திமுகவில் எவ்வித மறுசீரமைப்பு நடவடிக்கையும் தற்போது செய்ய வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்குத் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “எதிர்க்கட்சி அரசியலைத் தீவிரப்படுத்தி, தவெக அரசின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் வேலைகளை முதலில் பார்ப்போம்; கட்சி அமைப்பில் மாற்றங்கள் செய்வது போன்ற மற்ற விவகாரங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என அவர் கூறியதாகத் தெரிகிறது.
கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், மாற்றங்களை உருவாக்கவும் அமைக்கப்பட்ட கள ஆய்வுக்குழு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெறும் கண்துடைப்பா என திமுக நிர்வாகிகள் சிலர் தங்களுக்குள் முணுமுணுத்து வருகின்றனர். தலைமையின் இந்தத் திடீர் முடிவால் கட்சிக்குள் செய்யப்படவிருந்த சீரமைப்புப் பணிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
