LATEST NEWS
கங்குவா திரைப்படத்திற்காக 15 வருடம் கழித்து வேற லெவலில் உடலை மெருகேற்றிய சூர்யா.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகின்றார். சூரரைப் போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் என சூர்யாவின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகின்றார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்தில் இரு வேறு கெட்டப்புகளில் சூர்யா நடித்து வருகின்றார். விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக பட குழுவினர் அனைவரும் வெளிநாடு செல்ல உள்ளனர். இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் ப்ரோமோ ஆகியவை கடந்த சில வாரங்களுக்கு முன்பே சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சூர்யா திரைப்படத்திற்காக தனது உடலை வேற லெவலில் மெருகேற்றி வருகிறார். அதாவது சுமார் 15 வருடம் கழித்து தனது உடலை சிக்ஸ் பேக்ஸ் தெரிய வெறித்தனமாக மெருகேற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Suriya – Maintaining this level of Fitness for more than 15 years needs an immense amount of discipline..🤝 pic.twitter.com/ghzkGvwOBG
— Laxmi Kanth (@iammoviebuff007) August 19, 2023