LATEST NEWS
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து திடீரென விலகிய ரித்திகா… இனி அவருக்கு பதில் இந்த நடிகையா?.. ரசிகர்கள் ஷாக்..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தினம் தோறும் புது விதமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சீரியலின் கதாநாயகன் ஆன கோபி தனது குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் பாக்யா தன்னந்தனியாக நின்று குடும்பத்தை கவனித்து வந்தார்.
அதே சமயம் தன்னுடைய கனவுகள் அனைத்தையும் நினைவாக பாக்கியா தற்போது கல்லூரி சென்று படித்து வரும் நிலையில் தினம் தோறும் புதுவிதமான சிற்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் எழில் மனைவி அமிர்தா கதாபாத்திரத்தில் நடிகை ரித்திகா நடித்து வருகின்றார்.
இதற்கு முன்பு ராஜா ராணி சீரியலில் இவர் நடித்துள்ள நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு விணு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். இனி அவருக்கு பதிலாக அமிர்தா கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷிதா அசோக் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இவர் காற்றுக்கென்ன வேலை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.