CINEMA
2026-ல் மாற்றம் வரும்….. தளபதியை CM சீட்-ல உக்கார வைப்போம்…. அடிச்சி சொல்லும் மகளிர் அணி…!!
பனையூரில் தவெக கட்சி கொடியேற்ற விழா சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது. விழாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர். கொடியை அறிமுகம் இன்று செய்து வைத்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அதில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போலவும் உளது. அதன்பின் கொடியையும் ஏற்றி வைத்தார். இதனையடுத்து தவெகவின் கட்சி பாடலும் ஒளிபரப்பட்டது. தமிழன் கொடிப் பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற வரிகளுடன் அந்த பாடல் தொடங்குகிறது.
இதனை விஜய் ரசிகர்கள் மற்றும் அவருடைய அரசியல் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்தவகையில் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அளித்துள்ள பேட்டியில், 2026-ல் மாற்றம் வரும். என்ன அண்ணா தளபதியை CM சீட்-ல உக்கார வைப்போம் என்று உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளனர்.