அனைவருக்கும் எச்சரிக்கை கொடுத்த டி.ஜி.பி… புதிய தொழில் நுட்பத்துடன் செயல்படும் ஒரு குழு.. யாரும் இனிமேல் தப்பிக்க முடியாது … - cinefeeds
Connect with us

Uncategorized

அனைவருக்கும் எச்சரிக்கை கொடுத்த டி.ஜி.பி… புதிய தொழில் நுட்பத்துடன் செயல்படும் ஒரு குழு.. யாரும் இனிமேல் தப்பிக்க முடியாது …

Published

on

ஆபாசப் பட விவகாரம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் அதிரடி திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும்,புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டதாகவும். டி.ஜி.பி ரவி இன்று கூறினார்….

ஆபாச இணையதளங்கள் சில தங்களது தளங்களில் உறுப்பினர்களாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பார்ப்பதற்கு ஆபாசப் படங்களை வழங்கி வருகிறது. சில தளங்கள் கட்டணமில்லாமல் இலவசமாக ஆபாசப் படங்களை வழங்கி வருகிறது. இந்தியாவில் ஆபாச தளங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்னும் சில தளங்கள் மூலம் பலர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதாகப் புகார் உள்ளது.

Advertisement

இந்தச்சூழ்நிலையில் குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள், பரப்புவர்கள், மற்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்வோர் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்தார். இதனைத்தொடர்ந்து 12 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏ.டி.ஜி.பி ரவி, தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”இனிமேல் குழந்தைகளின் ஆபாசப் படங்களை செல்போனில் வைத்திருந்தாலே அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

அதற்காக ‘போக்சோ’ சட்டத்தில் திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் மூலம் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தும் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே செல்போன் உபயோகிப்பவர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஆபாச தளங்களில் சூழ்ச்சிகளில் சிக்கிவிட வேண்டாம், எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் சிறார் ஆபாசப் பட விவகாரம் தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் ஐஜி.களிக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in