LATEST NEWS
“கை தற்செயலாக பட்டுடுச்சு” பணியிடத்திற்கு வெளியே நின்ற பெண்ணை அறைந்து காதை செவிடாக்கிய நபர்… நீதிமன்றத்தில் மழுப்பல் பதில்… வைரலாகும் வீடியோ..!!
துருக்கியில் உள்ள நெவ்செஹிரில் பணியிடத்திற்கு வெளியே காத்திருந்த பெண் ஒருவரை அறைந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு செவித்திறன் இழப்பு (காது கேளாமை) ஏற்பட்டுள்ளது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட அந்த நபர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், தான் அந்தப் பெண்ணை வேண்டுமென்றே தாக்கவில்லை என்று கூறியுள்ளார். தனது கை தற்செயலாக அவர் மீது பட்டுவிட்டதாகக் கூறி அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனினும், பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்பைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவரை சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளது.
