LATEST NEWS
நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..! போதை ஆசாமியின் பார்ச்சூனர் கார் மோதி.. சாலையோர வியாபாரம் செய்த தாய், மகன் சம்பவ இடத்திலேயே பலி..!!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிகோல் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் சோபா கவர்களை விற்பனை செய்து கொண்டிருந்த தாய் மற்றும் மகன் மீது வேகமாக வந்த பார்ச்சூனர் கார் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
விபத்தில் பலியானவர்கள் 30 வயதான பூனம் பென் மற்றும் அவரது 15 வயது மகன் சாகர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காரை ஓட்டி வந்த 36 வயதான வி ரல் சாவ்ஜிபாய் சவுத்ரி என்ற நபரை அகமதாபாத் போக்குவரத்து போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.
காவல்துறையினர் நடத்திய சோதனையில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கடுமையான மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் ஓட்டி வந்த காரில் இருந்து சீல் வைக்கப்பட்ட 6 பீர் கேன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள வி ரல் சவுத்ரி மீது அலட்சியமாக வாகனம் ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் குஜராத் மதுவிலக்கு சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
