LATEST NEWS
“உங்களுக்கு விவாகரத்து வேண்டுமா?” நீதிபதி கேட்ட கேள்வி… அடுத்த நொடியே நீதிமன்றத்தில் கதறி அழுத மனைவி.. 5 ஆண்டு வழக்கில் மாறிய கிளைமாக்ஸ்.. உருக வைக்கும் பின்னணி..!!
ஐந்து ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருந்த விவாகரத்து வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளிவரவிருந்த அந்த நாளில், நீதிமன்றமே ஆச்சரியப்படும்படியான ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. “உங்களுக்கு உண்மையிலேயே விவாகரத்து வேண்டுமா?” என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு கணவன் சௌரப் பதிலேதும் கூறாமல், தன் மனைவி சிகாவைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தார். அடுத்த நொடி, சிகா தன் கையில் இருந்த விவாகரத்து ஆவணங்களை கிழித்தெறிந்துவிட்டு, ஓடிச்சென்று தன் கணவனை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டு கணீர் என கதறி அழுதார். பிரிவின் விளிம்பில் இருந்த இரு இதயங்களும் நீதிமன்ற வளாகத்திலேயே மீண்டும் ஒன்றிணைந்தன.
இந்த திடீர் மாற்றத்திற்குப் பின்னால் முந்தைய நாள் நடந்த ஒரு உணர்வுப்பூர்வமான சம்பவம் ஒளிந்திருந்தது. சிகாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டபோது, பழைய பகையையும் கசப்பான நினைவுகளையும் தூக்கி எறிந்துவிட்டு, சௌரப் ஒரு பொறுப்பான மருமகனாக ஓடிவந்து நின்றார். தன் மாமனாருக்கு சிறந்த சிகிச்சை அளிப்பதற்காக அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, இறுதிவரை துணையாக நின்றார். விவாகரத்து தீர்ப்புக்கு ஒரு நாள் முன்பு சௌரப் காட்டிய இந்த உன்னதமான அன்பும் அக்கறையும்தான், சிகாவின் மனதில் இருந்த அனைத்து கோபங்களையும் ஈகோவையும் கரைத்து, அவர்களின் திருமண வாழ்க்கையை மீண்டும் மலரச் செய்தது.
