“இனி எங்க வழி தனி வழி” பதவி பிச்சைக்காக கூட்டணி.. காங்கிரஸ் துரோகத்தால் இந்தியா கூட்டணியை எறிஞ்சிட்டோம்.. திமுக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இனி எங்க வழி தனி வழி” பதவி பிச்சைக்காக கூட்டணி.. காங்கிரஸ் துரோகத்தால் இந்தியா கூட்டணியை எறிஞ்சிட்டோம்.. திமுக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

Published

on

“பதவி பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் செய்த துரோகத்தால், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி விட்டோம்” என்று திராவிட முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பி. மாணிக்கம் தாகூர் மற்றும் சில தலைவர்கள் தொடர்ந்து திமுகவுக்கு எதிராகப் பேசி வந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்துள்ளது. இனி அவர்களின் எந்தவொரு போராட்டங்களிலும் இணைய வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றும், தங்களை வற்புறுத்தும் உரிமை காங்கிரசுக்குக் கிடையாது என்றும் திமுக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா கோரி டெல்லியில் காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பாஜகக்கு பயந்து திமுக பங்கேற்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள திமுக, கடந்த மே மாதம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைவதற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததைக் குறிப்பிட்டு, பதவிக்காகக் கூட்டணி தர்மத்தை மீறிய ‘காங்கிரஸ் ஒட்டுண்ணிகள்’ செய்த துரோகமே தாங்கள் இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறக் காரணம் எனச் சாடியுள்ளது.

Advertisement

இத்தகைய அரசியல் துரோகச் சுமைகளைத் தூக்கி எறிந்த பிறகு, அண்மையில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுவது போல திமுக மீதான மக்கள் ஆதரவு மேலும் அதிகரித்துள்ளதாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தங்களுக்குக் கூட்டணி வியூகம் குறித்தோ அல்லது அரசியல் துணிச்சல் குறித்தோ யாரும் பாடம் நடத்தத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள திமுக, “இனி எங்கள் வழி தனி வழி” என்று பிரகடனப்படுத்தித் தமிழ்நாட்டில் சுயேச்சையான அரசியல் பயணத்தைத் தொடரப் போவதாகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in