LATEST NEWS
அய்யோ..! கடவுளே 30-வது மாடியில் இருந்து கீழே விழுந்து சாஃப்ட்வெர் இன்ஜினியர் துடிதுடித்து பலி… நடந்தது என்ன..? பகீர் சம்பவம்..!!
ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 30-வது மாடியில் இருந்து கீழே விழுந்து, 29 வயதான மென்பொருள் ஊழியர் உப்பாலா பாரத் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலம் சூரியாபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நனக்ராம்குடாவில் உள்ள ‘கோல்ஃப் எட்ஜ்’ அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து, சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் இவர் குடியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தன்று 30-வது மாடியில் இருந்து பாரத் திடீரென கீழே விழுந்துள்ளார். அப்போது அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஹூண்டாய் வேகன்ஆர் காரின் மீது அவர் பயங்கரமாக மோதியுள்ளார். இதனால் அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாரத்தின் உறவினர் உப்பாலா கிஷோர் கச்சிபௌலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாரத்தின் உடலை உடற்கூறாய்வுக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தவறி விழுந்தாரா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
