LATEST NEWS
NH 48-ல் திடீர் பரபரப்பு… சாலையோரச் சாக்கடையில் வெளிநாட்டுப் பெண் செய்த விசித்திர காரியம்… அலறியடித்துப் பார்த்த வாகன ஓட்டிகள்.. வைரல் வீடியோ..!!
டெல்லி மஹிபால்பூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-ல் வெளிநாட்டுப் பெண் ஒருவர் சாலையோரச் சாக்கடைக் கால்வாய்க்குள் நடந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்த நெடுஞ்சாலையில், அந்தப் பெண்ணின் விசித்திரமான செயலால் பெரும் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பான சூழலும் உருவானது. அங்கிருந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்த அசாதாரண சம்பவத்தைக் காண்பதற்காகக் கூட்டமாகத் திரண்டதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது.
முதற்கட்ட தகவல்களின்படி, அந்த வெளிநாட்டுப் பெண் மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது சுயநினைவற்ற நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகித் தீயாய் பரவி வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் அந்தப் பெண்ணைப் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் கால்வாய்க்குள் இறங்கியதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த விரிவான விவரங்களை அறிய காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
