CRIME
“சீக்கிரம் பால் கொடுங்க..!” அவசரமாகக் கேட்ட 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூர கதி.. பால்காரரின் வெறிச்செயல்.. தந்தை கொடுத்த அதிரடிப் புகார்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், ஹரி டங்கி பகுதி அருகே பால் வாங்கச் சென்ற 6 வயது சிறுவன் மீது பால் கடைக்காரர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர் லால் என்பவரது 6 வயது மகன், அவசரமாகப் பால் தருமாறு கடைக்காரரிடம் கேட்டுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கடைக்காரர், சிறுவனின் ஆடைகளைக் களைந்து, கொதிக்கும் பாத்திரத்தில் இருந்த பாலில் அவனது இடுப்புப் பகுதியை முக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூரச் செயலால் பலத்த தீக்காயமடைந்த அந்த சிறுவன், தற்போது தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த மனிதாபிமானமற்ற கொடூரம் குறித்து சிறுவனின் தந்தை சுந்தர் லால் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். சிறுவனுக்கு நேர்ந்த இந்த கொடூரக் கொடுமை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அலிகார் போலீசார், தலைமறைவாக உள்ள கடைக்காரரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பால் கேட்க வந்த 6 வயதுக் குழந்தைக்கு நேர்ந்த இந்த விபரீதம் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பொதுமக்களிடையே பலத்த கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
