LATEST NEWS
மாதம் ரூ.2500 மற்றும் இலவச பேருந்து பயணம்… பட்ஜெட்டில் அதிரடி காட்டப் போகும் முதலமைச்சர் விஜய்..!!!
தமிழ்நாடு அரசின் 2026-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு, தங்களின் முதல் பட்ஜெட்டில் பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகையை மாதம் ரூ.2,500-ஆக உயர்த்துவது மற்றும் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஆகிய இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதால் அரசுக்கு ஏற்படக்கூடிய நிதி நெருக்கடி மற்றும் கூடுதல் செலவினங்களைச் சமாளிப்பது குறித்து முதலமைச்சர் உயர் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தத் திட்டங்களை ஒரே நேரத்தில் செயல்படுத்துவதா அல்லது முன்னுரிமை அடிப்படையில் ஒன்றை மட்டும் முதலில் கொண்டு வருவதா என்பது குறித்து அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள தவெக அரசு, இந்த பட்ஜெட்டில் இத்திட்டங்களை அறிவிக்குமா அல்லது அடுத்தகட்டமாகச் செயல்படுத்தப்படுமா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. எது எப்படியிருப்பினும், வரவிருக்கும் பட்ஜெட் பெண்களுக்குப் பல முக்கிய அறிவிப்புகளைக் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.
