“வேலைவாய்ப்பில் முன்னுரிமை + ரூ.20,000 ஊக்கத்தொகை…! தமிழக அரசின் பிரம்மாண்ட அப்ரண்டிஸ் முகாம்..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வேலைவாய்ப்பில் முன்னுரிமை + ரூ.20,000 ஊக்கத்தொகை…! தமிழக அரசின் பிரம்மாண்ட அப்ரண்டிஸ் முகாம்..!!”

Published

on

தமிழ்நாடு முழுவதும் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டத்திற்கான முகாம் ஜூலை 20, 2026 அன்று தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பல்வேறு பட்டப்படிப்புகள் முடித்த தகுதியான நபர்களை முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யவுள்ளன.

இலவசமாக வழங்கப்படும் இந்த ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சியின் போது, பயிற்சியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலம் மாதம் ரூ.12,000 முதல் ரூ.20,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்து தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் கூடுதலாகக் கிடைக்கும்.

Advertisement

விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களுடன் குறிப்பிட்ட தேதியில் முகாமில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு ‘மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி’ என்ற முகவரியிலோ அல்லது 94422-86874, 94999-37454, 63835-64479 ஆகிய அலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in