CINEMA
எத்தனை வருஷமானாலும் மாறாத திரிஷாவின் அழகு…. 25 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்பொழுதும் ரசிகர்களின் விருப்பப்பட்டியில் தான் இருந்து கொண்டிருக்கிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து அதன் பிறகு சினிமா துறையில் கால் பதித்தார். லேசா லேசா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர் அன்றிலிருந்து இன்று வரை பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் கோட் படத்தில் மட்ட பாடலுக்காக நடனமாடி இருந்தார். இந்நிலையில் இவருடைய 25 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#image_title