இது சட்டமன்றமா..? இல்ல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா..? எனக்கே சந்தேகம் வந்திடுச்சிப்பா… எதிர்கட்சிகளை கலாய்த்த உதயநிதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இது சட்டமன்றமா..? இல்ல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா..? எனக்கே சந்தேகம் வந்திடுச்சிப்பா… எதிர்கட்சிகளை கலாய்த்த உதயநிதி..!!

Published

on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியினர் சட்டப்பேரவையில் அதிக அளவில் பாட்டுப் பாடிப் பேசுவதை கிண்டலடிக்கும் வகையில் சுவாரசியமாகப் பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர், “சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக எதிர்க்கட்சிகள் பேசுவதை விட, ஆளுங்கட்சியினர் தான் இங்கு அதிகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சுட்டிக்காட்டினார். மேலும், “கேள்வி கேட்டால் அதற்குரிய பதிலை மட்டும் சொல்லலாம.

அதைவிடுத்து இப்போது புதுப்பாணியாகப் பாட்டெல்லாம் வேறு பாட ஆரம்பித்துவிட்டீர்கள். எங்களுக்கே சில நேரங்களில் நாம் சட்டமன்றத்திற்கு வந்திருக்கிறோமா அல்லது ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு இங்கு பாட்டுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று நகைச்சுவையுடன் விமர்சித்தார்.

Advertisement

உதயநிதி ஸ்டாலினின் இந்த கலகலப்பான “சூப்பர் சிங்கர்” கலாய் பேச்சைக் கேட்டு, அவையிலிருந்த முதலமைச்சர் விஜய் மற்றும் சக உறுப்பினர்கள் புன்னகையுடன் அமைதியாகக் கவனித்தனர். ஆளுங்கட்சியினரின் நீண்ட பாடல்களுடனான உரையை விமர்சித்து உதயநிதி பேசிய இந்த கலகலப்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பரவலான விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in