LATEST NEWS
திருமாவை துணை முதல்வராக்கி பார்க்கணும்… இதுதான் கடைக்கோடி தொண்டனின் ஆசை… அது நிச்சயம் நடக்கும்… அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்..!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனைத் துணை முதலமைச்சராக பார்க்க வேண்டும் என்பது கடைக்கோடி விசிக தொண்டனின் ஆசை என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். அதற்கான காலச்சூழல் வரும்போது நிச்சயம் அது நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது சேலம் மாவட்ட விசிக நிர்வாகிகளின் விருப்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு விசிகவினரின் விருப்பம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னி அரசின் இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் விசிக தலைவர் திருமாவளவனின் துணை முதல்வர் (DCM) பதவி விவகாரத்தை மீண்டும் சூடாக்கியுள்ளது. விசிக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான வன்னி அரசுவின் இந்த வெளிப்படையான விருப்பமும் கருத்தும், தற்போதைய தவெக கூட்டணி அரசுக்குள்ளும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
