VIDEOS
நியூயார்க் நகரில் எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் வீடியோ.. என்ன காரணம் தெரியுமா?.. அவரே பகிர்ந்த பதிவு..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் ஸீபா ஷெரின் என்ற முஸ்லிம் நடிகை ஹிஜாப் அணிந்து கொண்டு நடித்து வருகின்றார்.
ஜீவானந்தத்தின் உதவியாளராக பர்ஹானா கதாபாத்திரத்தில் இவர் நடிக்கின்றார். நடிப்பதற்கு ஆடிஷனில் தேர்வான நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு தான் நடிப்பேன் என இவர் கூறியதால் அதனை ஏற்ற இயக்குனர் திருச்செல்வம் அதற்கு அனுமதி அளித்துள்ளார். இதனால் இந்தியாவில் ஹிஜாப் அணிந்து நடிக்கும் முதல் நடிகை என்ற பெயரை இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இதனை குறிப்பிட்ட நியூயார்க் நகரில் உள்ள முக்கிய கடைவீதியில் இவரின் வீடியோ ஒளிபரப்பப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோவை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இதனை என்னால் நம்பவே முடியவில்லை இவ்வளவு அன்பை இந்த உலகத்திடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
