VIDEOS
காதலி புகைப்படத்தை வெளியிட்டு மறைமுகமாக திருமணத்தை அறிவித்த விஜய் தேவரகொண்டா.. கூடவே இப்படி ஒரு ட்விஸ்ட்டா..??

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார்.
இவர் தற்போது சமந்தாவுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பெண்ணின் கையை பிடித்து இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் என் வாழ்க்கையில் முழு சந்தோஷம் என்று கூறி விரைவில் இது குறித்து அப்டேட் கொடுப்பேன் என பதிவிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் விஜய் தேவரகொண்டாவின் காதலி யாராக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேசமயம் ரசிகர்களின் கேள்விக்கு தான் பதில் அளிக்க போவதாகவும் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் பிரபல நடிகையுடன் இருக்கும் ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் ஒருவேளை விஜய் தேவரகொண்டா திருமணம் செய்து கொள்ளப் போக இருக்கும் பெண் இவரா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.