LATEST NEWS
விஜய்யின் வாரிசு திரைப்பட பிரபலம் மாரடைப்பால் திடீர் மரணம்…. சோகத்தின் மூழ்கிய திரையுலகம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தை வம்சி இயக்கி உள்ள நிலையில் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக படக்குழு அண்மையில் அறிவித்தது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் ராதிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில் ஒரு அதிர்ச்சியான செய்தி தற்போது வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் ப்ரொடக்ஷன் டிசைனர் சுனில் பாபு திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 50 வயதாகும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள முள்ளிட்ட பல தென்னிந்திய மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்ட இன்று உயிரிழந்த நிலையில் இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Sad news #Varisu production designer #SunilBabu (50) passes away due to a cardiac arrest in Kochi. #SunilBabu a former associate of Sabu Cyril had worked as production designer in many big films in Tamil, Malayalam, Telugu & Hindi. #RIPSunilBabu pic.twitter.com/LWTqUfuaCr
— Sreedhar Pillai (@sri50) January 6, 2023
