VIDEOS
விக்கிரமனுக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கு…. பிக்பாஸ் வீட்டில் ரகசியத்தை போட்டுடைத்த மைனா நந்தினி….!!!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் முதல் வாரம் ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக முன்வந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நடன இயக்குனர் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா என அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற கடந்த வாரம் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார்.
தற்போது கடுமையான டாஸ்கை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் இந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீடு அரண்மனையாக மாறி உள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ராபர்ட் மாஸ்டர் ராஜாவாக, ரட்சிதா ராணியாக, அசின் படைத்தளபதி, ராஜ குரு விக்ரமன்,இளவரசர் மணிகண்டன் மற்றும் இளவரசி ஜனனி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதில் சேவகாரராக இருக்கும் வைனா நந்தினி காது கேளாதவராகவும் இருக்கிறார். அவரிடம் போய் ராஜகுருவான விக்கிரமன் பணியாளரான குயின் சி உங்கள் மீது கண் வைத்திருக்கின்றார். கவனமாக இருங்கள் என கூறியுள்ளார். இதனை கேட்ட மைனா நந்தினி ஓ உங்களுக்கு என் மீதும் பணியாளர் மீதும் ஒரு கண் இருக்கா என நக்கல் அடித்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
https://twitter.com/gurunathaa4/status/1593265253898330114
