LATEST NEWS
பள்ளிப் பருவத்தில் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே?…. பலரும் பார்க்காத கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இளைஞர்களின் கனவு கன்னியான நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதல் முதலாக இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் நடிகை சாவித்திரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக வென்ற கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
அதன் மூலம் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போதைய கீர்த்தி சுரேஷ் மாமன்னன் மற்றும் சைரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை ரசிகர்கள் அதிக அளவு பகிர்ந்து வருகிறார்கள்.
