LATEST NEWS
அந்த இடத்தில் எம்ஜிஆர் முகத்தை பச்சை குத்திய நடிகர் விஷால்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷால் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதாவது தீவிர புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ரசிகர் ஆன விஷால் தற்போது எம்ஜிஆர் முகத்தை தன்னுடைய நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த பலரும் அரசியலுக்கு வர திட்டம் உள்ளதா எனக் கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
