CINEMA
பிக்பாஸ்-8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா…? விஜய் டிவி வைத்த டுவிஸ்ட்….!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் கமல் விலகி விட்டார். இந்த நிலையில் பிக் பாஸ்-8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பெரிய தொகை வழங்க தயாரிப்பு நிறுவனத்தின் முடிவு செய்துள்ளது. நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதி ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. மேலும் பெரும் தொகை என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு நயன்தாராவும் ஆர்வம் காட்டுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவோடு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதால் இருவரில் ஒருவரை இறுதி செய்து விரைவில் பிக் பாஸ் படப் பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.