CRIME
அடக்கொடுமையே..! கள்ளக்காதலனை விட்டு கணவனைக் குத்தச் சொன்ன மனைவி..! முகமூடியுடன் வீட்டிற்குள் நுழைந்த ஜிம் ட்ரெய்னர்..! கடைசியில் நடந்த ஷாக்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள இந்திராபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட வசுந்தரா செக்டார்-1 பகுதியைச் சேர்ந்தவர் சசாங்க் சர்மா. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரியா சர்மா, மத்திய அரசு நிறுவனத்தில் மூத்த கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். பிரியா உடற்பயிற்சிக் கூடம் (ஜிம்) சென்று வந்த நிலையில், அங்கு ஜிம் நடத்துபவரான பிரபாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.
இருவரும் ஒன்றாக வாழ விரும்பிய நிலையில், அதற்கு கணவர் சசாங்க் சர்மா தடையாக இருப்பதாக பிரியா கருதியுள்ளார். இதனால் தனது காதலன் பிரபாத்துடன் இணைந்து கணவனைக் கொலை செய்ய பிரியா சதித் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, திட்டமிட்டபடி பிரியா ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து, முகமூடி அணிந்த பிரபாத் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து சசாங்க் மீது கத்தியால் தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். எனினும், சசாங்க் அந்தத் தாக்குதலில் இருந்து தப்பிக் கொண்டார். இதைக் கண்டு பயந்துபோன பிரபாத் அங்கிருந்து தப்பியோடினார்.
முதலில் சசாங்க் அடையாளம் தெரியாத நபர்கள் மீது புகாரளித்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பிரியாவின் மீது சந்தேகம் எழுந்து அவரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் காவல்துறையினரை திசைதிருப்ப முயன்ற போதிலும், சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற டிஜிட்டல் ஆதாரங்களை காவல்துறையினர் காட்டியவுடன் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கணவனைக் கொலை செய்ய முயன்ற மனைவி பிரியா மற்றும் அவரது காதலன் பிரபாத் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
