LATEST NEWS
“‘சுற்றி நிறைய ஆண்கள் இருக்காங்க… ரொம்ப பயமா இருக்கு… தோழியிடம் அழுது பேசிய மாணவி… தண்டவாளத்தில் சடலமாக மீட்பு..” ரயிலில் நடந்தது என்ன..? கதறி துடிக்கும் குடும்பத்தினர்..!!
அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும், நடனக் கலைஞருமான இமாஸ்ரீ போரோ, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அசாம் திரும்பியுள்ளார். அப்போது ரெயிலில் ஏறிய அவர், தன்னைக் சுற்றி பல ஆண்கள் இருப்பதாகவும், தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும் தனது தோழியிடம் செல்போனில் இரவு 2 மணியளவில் அழுதுகொண்டே பேசியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு, எந்தத் தொடர்பும் இல்லாமல் மாயமாகியுள்ளார்.
கவுகாத்தி ரெயில் நிலையத்திற்கு வந்தடைந்த மகளை அழைத்துச் செல்லக் காத்திருந்த பெற்றோர், அவர் ரெயிலில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் அருகே ரெயில் தண்டவாளத்தில் காயங்களுடன் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற பெற்றோரும் உறவினர்களும் அது மாயமான இமாஸ்ரீயின் சடலம் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
இச்சம்பவம் குறித்து ரெயில்வே காவல்துறையினரும் உள்ளூர் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இமாஸ்ரீ கொலை செய்யப்பட்டாரா அல்லது ரெயிலில் இருந்து யாரும் கீழே தள்ளிவிட்டார்களா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரெயில் நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
