LATEST NEWS
“என்ன வச்சு செஞ்ச மீம்ஸை பார்த்து நானே சிரிச்சேன்!”.. ஓப்பனாக பேசிய அண்ணாமலை.. வியந்துபோன நெட்டிசன்கள்..!!
சமூக ஊடகங்களில் தன்னை கிண்டல் செய்து வெளிவரும் மீம்ஸ் வீடியோக்களைத் தான் ரசித்துப் பார்த்துச் சிரித்ததாக பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மனிதர்கள் தங்களைத் தாங்களே பார்த்து சிரிக்கக் பழகிக் கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு உங்களை நீங்களே பார்த்து சிரிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை வாழ்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்றும் தத்துவார்த்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் மீம்ஸ் கலாசாரத்தில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனைத் தான் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகவே எடுத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். மிகவும் சீரியஸான அரசியல் மற்றும் சமூக விஷயங்களைக் கூட தற்கால மக்கள் ஜாலியாகவும் நகைச்சுவையாகவும் சொல்வதையே அதிகம் விரும்புகிறார்கள் என்றும் அண்ணாமலை அந்தப் பேட்டியில் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
