என்னது…! பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு தடையா..? கதறும் மெட்டா… அலறவிட்ட ஐரோப்பிய ஒன்றியம்..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது…! பேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு தடையா..? கதறும் மெட்டா… அலறவிட்ட ஐரோப்பிய ஒன்றியம்..!!!

Published

on

தற்போது ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு எல்லோர் கையிலும் பரவலாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டன. இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி, சிறு குழந்தைகள் கூட இந்தச் செயலிகளில் ‘ரீல்ஸ்’ போன்ற வீடியோக்களைப் பார்க்கும் பழக்கத்திற்கு பெருமளவில் ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலிகள், பயனர்களை—குறிப்பாகச் சிறுவர்களை—தங்களுக்கு அடிமையாக்கும் நோக்குடன் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்தச் செயலிகளில் உள்ள ‘ஆட்டோபிளே’ உள்ளிட்ட சில அம்சங்கள் பயனர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களைத் தொடர்ந்து செயலியைப் பயன்படுத்த வைப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மக்களின், குறிப்பாகக் குழந்தைகளின் மனநலனைப் பாதிக்கும் வகையிலுள்ள இத்தகைய அம்சங்களை மெட்டா நிறுவனம் உடனடியாக நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. மேலும், தங்களின் அல்காரிதம் மற்றும் டிசைன்களில் உரிய மாற்றங்களைச் செய்யத் தவறினால், மெட்டா நிறுவனத்திற்கு மிகப்பெரிய தொகையை அபராதமாக விதிக்க நேரிடும் என்றும் அந்த எச்சரிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in