LATEST NEWS
யாரு சாமி நீங்களா..! மட்டன் இல்லனா மண்டைய ஒடப்போம்..! பீகாரில் சிக்கன் பரிமாறியதால் கல்யாண வீட்டில் பயங்கர அடிதடி..!!
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ராஜன்பூர் கிராமத்தில் சமீபத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. பொதுவாகவே வட மாநில திருமணங்களில் அசைவ உணவு பரிமாறுவது தொடர்பான பிரச்சனைகளால் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாருக்கு இடையே மோதல்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. அதே போன்ற ஒரு விசித்திரமான சம்பவம்தான் இந்த திருமண வீட்டிலும் அரங்கேறியுள்ளது.
இந்தத் திருமண விருந்தின் போது, மணமகன் வீட்டினருக்கு ‘மட்டன்’ பரிமாறப்படும் என்று மணமகள் வீட்டார் தரப்பில் முன்பே கூறப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், விருந்து பரிமாறப்படும் போது மட்டனுக்குப் பதிலாக ‘சிக்கன்’ பரிமாறப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த மணமகன் வீட்டினர் மணமகள் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
உணவு விஷயத்தில் தொடங்கிய இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் எல்லை மீறி, இரு தரப்பினருக்கும் இடையே பெரிய அடிதடி மற்றும் கடுமையான மோதலாக மாறியது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கூட்டத்தைக் கலைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீவிரமான மோதலில் காயமடைந்த பலரும் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
