LATEST NEWS
அண்ணாவும் ராஜாஜியும் இருந்த இடத்துல இவரா..? முதல்வர் விஜயை ஒருமையில் பேசிய ஆ. ராசா… SP அலுவலகத்தில் பாய்ந்த அதிரடிப் புகார்..!!
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, காங்கிரஸ், விசிக, மற்றும் இடதுசாரி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். சமீபத்தில் சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேசிய ‘குட்டிக்கதை’ ஒன்று தி.மு.க.வினரிடையே பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருவாரூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ. ராசா, பேரறிஞர் அண்ணாவும் ராஜாஜியும் அலங்கரித்த சட்டமன்றத்தில் இன்று தகுதியற்றவர்கள் எல்லாம் முதலமைச்சராக இருக்கிறார்கள் என்ற தொனியில் விமர்சித்தார். மேலும், முதலமைச்சர் விஜயை ஒருமையில் விளித்துப் பேசிய அவரது பேச்சு பெரும் விவாதப் பொருளாக மாறியது.
ஆ. ராசாவின் இந்த அவதூறான பேச்சு சமூக அமைதியைக் கெடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, அம்மாபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராசா மணிகண்டன் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
