Uncategorized
தமிழனின் பெருமையை பறைசாற்றும் விதமாக மகனுக்கு பெயர் வைத்த நடிகர் சிபிராஜ் !! பெயரை கேட்டு உச்சகட்ட மகிழ்ச்சியில் சத்யராஜ் !!

தமிழ் சினிமாவில் இன்று முதல் இன்று வரை தன்னுடைய நடிப்பால் அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த நடிகர்கள் பலர் உள்ளார்கள். அந்த வரிசையில் தன்னுடைய நடிப்பால் இன்று வரை நிலைத்து நிற்க கூடிய ஒரு நடிகர் தான் நடிகர் சத்யராஜ் அவர்கள். இவருடைய நடிப்பை பற்றி நாம் சொல்ல வேண்டியது அவசியம் இல்லை. அந்த அளவிற்கு பேரபார்மன்ஸ் பண்ண கூடிய ஒரு சிறந்த நடிகர் இவர்.
இந்நிலையில் நடிகர் சிபிராஜ் அவரின் மகனுக்கு வைத்த பெயர் குறித்து பெருமைப்படுவதாக பதிவிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ள பதிவில், ”இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் அவரின் தமிழ் பற்றை எண்ணி வாழ்த்து கூறியுள்ளனர்.இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இதேவேளை, குறித்த ட்விட் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.மேலும் இந்த ட்வீட் குறித்து சத்யராஜும் மகிழ்ச்சியில் உள்ளாராம்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!🙏🏻 #தீரன்சின்னமலை #dheeranday pic.twitter.com/m3eo7vgWvM
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 17, 2020