Uncategorized
திங்கட்கிழமைக்குள்..! – பாடகர் எஸ்.பி.பியின் தற்போதய உடல்நிலை குறித்து மகன் சரண் வெளியிட்ட முக்கிய தகவல்..!
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.பி.சரண் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்பிபி-க்கு கொ ரோ னா தொ ற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எஸ்.பி.பி-யின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் தொடர்ந்து தகவலளித்து வருகிறார்.
இந்நிலையில், எஸ்பிபி-யின் உடல்நிலை சீராக உள்ளதாகவும். அவர் மெதுவாக குணம டைந்து வருகிறார் என செப்டம்பர் 2ம் திகதி நேற்று எஸ்.பி.பி.சரண் தெரிவித்திருந்தார்.
இன்று செப்டம்பர் 3 ம் தேதி எஸ்.பி.பி சரண் வெளியிட்ட வீடியோவில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை நான்காவது நாளாக சீராக உள்ளது.
இந்த வார இறுதி அல்லது திங்கட்கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என நான் காத்திருக்கிறேன்.
இறைவனின் ஆசிர்வாதம், அனைவருடைய பிரார்த்தனை மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களின் வாழ்த்துக்களால் திங்கட்கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என நம்பிக்கையுடன் இருப்பதாக எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
