பிரபல நடிகர் எஸ்பிபி-யின் பாடலை பியானோவில் வாசித்து பிரார்த்தனை..! காண்போரை நெகிழ வைத்த வீடியோ – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகர் எஸ்பிபி-யின் பாடலை பியானோவில் வாசித்து பிரார்த்தனை..! காண்போரை நெகிழ வைத்த வீடியோ

Published

on

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. கடந்த 5-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகின்றன.

நுரையீரல் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர்காக்கும் உபகரணங்கள் வழியாக, ஆக்ஸிஜன் அளிக்கப்பட்டு வருகின்றது. மருத்துவமனை வட்டாரத்தில் கூறுகையில், ‘சிகிச்சைக்கு, அவரது உடல் நிலை நன்கு ஒத்துழைக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்ற குரல்தான் சமூக வலைதள பக்கங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மாலை கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

Advertisement

இதில் பாரதிராஜா, ஆர்வி உதயக்குமார், கங்கை அமரன், தேவா, சித்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். சமூக வலைதளங்களில் பிரபலங்கள் தங்களின் பிரார்த்தனையை பகிர்ந்து டிவிட்டரையே திணர வைத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் எஸ்பி பாலசுப்ரமணியம் பாடிய பாடலை பியானோவில் வாசித்து அவருக்காக பிரார்த்தனை செய்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் தற்போது இணைத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in