LATEST NEWS
பிரபல நடிகை லக்ஷ்மி மேனன் வெளியிட்டுள்ள புகைப்படம்..! எக்குத்தப்பாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..!
“கும்கி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் இவர். மேலும் “கும்கி” திரைப்படத்திற்கு இயக்குனரான சசிகுமார் நடிப்பில் வெளிவந்த “சுந்தரபாண்டி” என்ற திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
எப்பொழுதும் திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேடி லட்சுமிமேனன். மேலும் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போயின. கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் “ரெக்க” திரைப்படத்தில் நடித்த லட்சுமிமேனன், தற்போது சினிமா பக்கமே தலை காட்டவில்லை. மேலும் தன்னுடைய கல்லூரி படிப்பை முழுவதும் முடித்ததும் பிறகு தான் இனிமேல் சினிமாவிற்கு வரப் போவதாக கூறியுள்ளார்.
சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியிட்டு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
