யாரும் கவலைப்பட வேண்டாம்…. காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ! பேரதிர்ச்சியில் கதறும் ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LifeStyle

யாரும் கவலைப்பட வேண்டாம்…. காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ! பேரதிர்ச்சியில் கதறும் ரசிகர்கள்

Published

on

எஸ்.பி.பி. கடைசியாக ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் தேடிப் பிடித்து பார்த்து மீண்டும் வைரலாக்கி வருகின்றனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அது தான் அவர் பேசி நாம் பார்த்த கடைசி வீடியோ. அந்த வீடியோவை ரசிகர்கள் தேடிக் கண்டுபிடித்து மீண்டும், மீண்டும் பார்த்து அழுகிறார்கள். அந்த வீடியோவில் எஸ்.பி.பி. கூறியிருந்ததாவது,

Advertisement

என்னை பரிசோதனை செய்த மருத்துவர்கள் எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் லேசாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்கள். ஆனால் என் குடும்பத்தார் என் மீது உள்ள அக்கறையால் என்னை தனியாக விட மாட்டார்கள். அதனால் தான் மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். நான் நலமாக இருக்கிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம். 2 நாட்களில் நான் வீடு திரும்பிவிடுவேன். ஓய்வு எடுக்கவே மருத்துவமனைக்கு வந்தேன்.

உங்கள் அனைவரின் அக்கறைக்கும் நன்றி என்றார். 2 நாட்களில் வீடு திரும்பிவிடுவேன் என்று சொல்லிவிட்டு இப்படி ஒரேயடியாக போய்விட்டீர்களே என்று ரசிகர்கள் கண்ணீர்விடுகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in