LATEST NEWS
ராதிகாவின் மகன் விஜய் பாட்டுக்கு வெறித்தனமாக ஆடுகிறார்! மில்லியன் பேர் பார்த்த வீடியோ..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் ராதிகா நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னனி இயக்குனரான பாரதிராஜா அவர்களால் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ராதிகா சரத்குமார்.
சீரியல் உலகில் எப்போதுமே நடிகை ராதிகா நடிக்கும் சீரியல்களுக்கும், தயாரிக்கும் சீரியல்களுக்கும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புண்டு. சமீப காலமாக சரத்குமார் மற்றும் ராதிகாவின் மகன் ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள், ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ராகுல் டான்ஸ் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், தளபதி விஜய்யின் பிகில் படத்தில் இடம் பெற்ற வெறித்தனம் பாட்டுக்கு செம மாஸாக டான்ஸ் ஆடுகிறார். மேலும் தளபதி விஜய் தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவர் செம மாஸாக டான்ஸ் ஆடியிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்னறனர். ஏற்கனவே ராகுல் பாடிய பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Little Supreme star #RahulSarath mass dance….@realradikaa @RahhulSarath pic.twitter.com/PHQ3gEqSOB
— Minnal Mahesh (@minnal_mahesh) August 18, 2020
