VIDEOS
10 வருடமாக சாலை கட்ட வீட்டை கொடுக்காத பெண்… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
சீனாவில் நெடுஞ்சாலை அமைக்க ஒரு பெண் வீட்டை தராததால் அந்த பெண்ணின் வீட்டை சுற்றி சாலை அமைக்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது
சீனாவில் நெடுஞ்சாலை ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு தனியார் நிறுவனத்திடம் திட்டத்தை ஒப்படைத்திருந்தது.
அந்த தனியா் நிறுவனம் அரசு குறிப்பிட்ட அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் பேசி அவர்களது இடத்தை எல்லாம் வாங்கி அதில் சாலை அமைத்து தர வேண்டும் என ஒப்பந்தம் செய்திருந்தது.
அதன் படி கடந்த 10 ஆண்டுகளால் அப்பகுதியில உள்ள ஒவ்வொரு இடத்தின் ஓனரிடம் பேசிய அந்நிறுவனம் அவர்களுக்கு பணமாகவோ அல்லது வேறு இடமாகவோ கொடுத்து இந்த இடத்தை வாங்கினார்.
ஆனால் அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய வீடான அதாவது சுமார் 40 சதுர மீட்டர் அளவு கொண்ட இடத்தை சொந்தமாக வைத்திருந்த பெண்ணா லியாங் என்பவர் அந்த இடத்தை விற்பனை செய்ய மறுத்துவிட்டார்.
இவர்கள் அந்த பெண்ணிற்கு அதிக தொகை தருவதாக கூறியும் அந்த பெண் இடத்தை கொடுக்கவில்லை.ஏன் அவருக்கு இரண்டு பிளாட்களை ஒதுக்கியும் அவர் அந்த இடத்தை தருவதாகஇல்லை.
இந்த போராட்டம் சுமார் 10 ஆண்டுகள் வரை நடந்தது. இந்த பெண்ணிடம் எப்படியாவது வீட்டை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் அங்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணியும் துவங்கியது.
இறுதிவரையிலும் அந்த பெண் விருப்பம் இல்லாமல் அந்த இடத்தை வாங்க முடியாது என்பதால் அந்த பெண் இருக்கும் இடத்தில் மட்டும் ரோடு செல்லாமல் சுற்றி செல்லும் படி பாலத்துடன் கட்டமைக்கப்பட்டது.
தற்போது அந்த பாலம் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. தற்போது அந்தபாலத்திற்கு நடுவே அந்த வீடு மட்டும் தனியாக இருக்கிறது.