“ஐயோ கடவுளே.. பெற்ற தாயே செய்த காரியமா இது..?” முள் புதருக்குள் வீசப்பட்ட 2 நாள் பச்சிளம் குழந்தை.. நெஞ்சை உலுக்கும் விபரீதம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஐயோ கடவுளே.. பெற்ற தாயே செய்த காரியமா இது..?” முள் புதருக்குள் வீசப்பட்ட 2 நாள் பச்சிளம் குழந்தை.. நெஞ்சை உலுக்கும் விபரீதம்..!!

Published

on

தேவ்ரி கிராமத்தில் உள்ள குளத்திற்கு அருகே, சாலையோர முள் புதருக்குள் ஒன்று அல்லது இரண்டு நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்றை யாரோ மர்ம நபர்கள் வீசிச் சென்றுள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தையை மீட்ட ஷேம்காட் காவல்துறையினர், உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்த ஆண் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன், உயிரோடு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மனிதநேயமற்ற முறையில் பச்சிளம் குழந்தையை ரோட்டோரம் வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து ஷேம்காட் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அனாதைக் குழந்தை யாருடையது, எந்த ஊரைச் சேர்ந்தது என்பது பற்றியோ அல்லது இச்சம்பவம் குறித்தோ யாருக்கேனும் ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக ஷேம்காட் காவல் நிலையத்தை அணுகி தகவல் தெரிவிக்குமாறு போலீசார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in