CRIME
திக்… திக்… நிமிடங்கள்..! ஓடும் காரில் கதறிய பெண்.. 2 மணி நேரம் நரக வேதனை கொடுத்த கொடூரன்கள்.. 20 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..! நடுங்க வைக்கும் நள்ளிரவு சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் இரு நபர் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூர தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணை ஏற்றிச் சென்ற குற்றவாளிகள், சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காரை பல்வேறு இடங்களுக்கு ஓட்டிச் சென்று வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். ஓடும் காரிலேயே அப்பெண்ணை அச்சுறுத்தி கொடூரமாகத் தாக்கியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்தூரில் உள்ள அரவிந்தோ மருத்துவமனை அருகே அப்பெண்ணை காரில் இருந்து இறக்கிவிட்டு அக்கும்பல் தப்பிச் சென்றுள்ளது. காயமடைந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
