“அடச்சீ.. பட்டப்பகலிலே அத்துமீறிய காமுகன்..” நடுரோட்டில் மைனர் சிறுமிக்கு நேர்ந்த கொடுரம்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ! – cinefeeds
Connect with us

CRIME

“அடச்சீ.. பட்டப்பகலிலே அத்துமீறிய காமுகன்..” நடுரோட்டில் மைனர் சிறுமிக்கு நேர்ந்த கொடுரம்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ!

Published

on

உத்தரப் பிரதச மாநிலம் அலிகார் மாவட்டம் ஜவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரௌலி பஜார் பகுதியில், பகல் நேரத்தில் மைனர் சிறுமி ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் ஆபாசமான முறையில் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த அத்துமீறல் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாகக் காவலில் எடுத்த காவல்துறையினர், அவர் மீது சாதாரணப் பிரிவின் (பிரிவு 151) கீழ் வழக்குப் பதிவு செய்து, சில மணி நேரங்களிலேயே அவரை விடுவித்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காமுகனை உடனடியாக ரிலீஸ் செய்த ஜவான் காவல்துறையினரின் செயல்பாட்டிற்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளதுடன், குற்றவாளி மீது போக்சோ போன்ற கடுமையான பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in