பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 எவிக்ஷன்…. யார் அந்த இரண்டு பேர்?…. வெளியானது இன்றைய ப்ரோமோ வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

TRENDING

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 எவிக்ஷன்…. யார் அந்த இரண்டு பேர்?…. வெளியானது இன்றைய ப்ரோமோ வீடியோ….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் களுடன் ஒப்பிடுகையில் இந்த சீசனில் சண்டை சச்சரவுகள் சற்று அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் போட்டியாளர்கள் டாஸ்க் நடக்கும் போது அதில் கவனம் செலுத்துவதை விட சண்டை போடுவதில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதனை கமல்ஹாசனும் கடுமையாக கண்டித்தார். தற்போது போட்டியாளர்கள் ஓரளவு நன்றாக விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அடுத்தடுத்த வாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டு தற்போது 13  போட்டியாளர்கள் இருந்தனர். இந்நிலையில்  போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளார்.

Advertisement

அதாவது வருகின்ற வாரம் டபுள் எலிமினேஷன் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பது குறித்து நாமினேஷன் செய்து வருகிறார்கள். அது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in