தளபதி விஜய்க்கு திடீரென அபராதம் விதித்த போலீசார்… எதற்காக தெரியுமா..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி விஜய்க்கு திடீரென அபராதம் விதித்த போலீசார்… எதற்காக தெரியுமா..??

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளதாகவும் இணையத்தில் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதனிடையே சென்னை அருகே பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்க நீலாங்கரையில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட விஜய் அக்கறை சந்திப்பில் உள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்த நிலையில் விஜயின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றது.

Advertisement

அந்த வீடியோ வெளியாகி பல விமர்சனங்களை பெற்ற நிலையில் சிக்னலை மீறிய குற்றத்திற்காக 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் விஜய்க்கு ரசீது அனுப்பியுள்ளனர். இதற்கு முன்னதாக காரில் கருப்பு கண்ணாடி ஒட்டியதற்கு நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in